உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கதிர்காமம் தொகுதியில் மரக்கன்று நடும் பணி

கதிர்காமம் தொகுதியில் மரக்கன்று நடும் பணி

புதுச்சேரி : பசுமை புதுச்சேரி இயக்கத்தின் கீழ் கதிர்காமம் தொகுதியில் மரக்கன்று நடும் பணியினை ரமேஷ் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். புதுச்சேரி அரசு அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்பில் அடுத்த 5 ஆண்டுகளில் பசுமைப் பரப்பை இரட்டிப்பாக்கும் செயல் திட்டத்துடன், 'பசுமை புதுச்சேரி' இயக்கத்தை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, ஒரு வீடு, ஒரு மரம், நகர்புறத் தோட்டம், கிராமப்புற காடு வளர்ப்பு, புனித தோப்புகளை மீட்டெடுத்தல், பசுமை வளாகம், பசுமைத் தொழில் மற்றும் அலுவலக வளாகம் என 7 கூறுகளை கொண்டு, 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியினை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கதிர்காமம் தொகுதியில் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடந்தது. விழாவில், தொகுதி எம்.எல்.ஏ., ரமேஷ் தலைமை தாங்கி, 1000 கொய்யா மரக்கன்றுகள் நடும் பணியினை துவக்கி வைத்தார். இதில், புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழுமத்தின் உறுப்பினர் செயலர் ரமேஷ், பொறியாளர் புகழேந்தி, திட்ட அலுவலர் விமல்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ