மேலும் செய்திகள்
9வது ஆண்டாக பசுமை தீபாவளி
31-Oct-2024
புதுச்சேரி ; புதுச்சேரி வனத்துறை சார்பில் மத்திய அரசு அறிவித்துள்ள தாயின் பெயரில் ஒரு மரம் வளர்ப்போம் என்ற திட்டத்தின் கீழ், மரக்கன்று நடும் விழா கோரிமேடு போலீஸ் மைதானத்தில் நேற்று நடந்தது. போலீஸ் ஐ.ஜி., அஜித்குமார் சிங்கலா, வனத்துறை அதிகாரி அருள்ராஜ் தலைமை தாங்கி, மரக்கன்றுகள் நட்டனர். வனத்துறை அதிகாரி அருள்ராஜ் கூறுகையில், 'தாயின் பெயரில் ஒரு மரம் என்ற திட்டத்தின் கீழ் போலீசில் 1,000 மரக்கன்றுகள் பயிற்சி காவலர்கள் மூலம் நடப்படுகிறது. இதுபோன்ற புதுச்சேரியில் தொடர்ந்து மரக்கன்றுகள் நட முடிவு செய்துள்ளோம்' என்றார்.காவலர் பயிற்சி பள்ளி எஸ்.பி., ரங்கநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர். போலீஸ் பயிற்சி பள்ளிக்கு புதிதாக தேர்வாகி பயிற்சிக்கு வந்துள்ள ஊர்காவல்படை வீரர்கள் போலீஸ் மைதானத்தை சுற்றி மரக்கன்றுகளை நடும் பணியில் ஈடுபட்டனர்.
31-Oct-2024