யானைகளுக்கு அஞ்சலி
புதுச்சேரி: புதுச்சேரியில் இறந்த மணக்குள விநாயகர் கோவில் யானைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. புதுச்சேரியில் கடந்தாண்டு மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி இறந்தது. கடந்த வாரம் குன்றக்குடி சுப்புலட்சுமி யானை இறந்தது. இறந்த யானைகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இறந்த யானைகள் படத்துடன் பேனர் அடித்து, அதற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, அண்ணா சாலை சந்திப்பில் நேற்று மாலை நடந்தது.அனைத்து விலங்குள் அமைப்பு சார்பில், நடந்த நிகழ்ச்சிக்கு, அனைத்து விலங்குகள் நல அமைப்பு இயக்கம் நிர்வாகிகள் அசோக்ராஜ், ஜெபின், விஜய், தமிழ் நெஞ்சன், தமிழர் களம் அழகர், தமிழ் தேசிய இயக்கம் வேல்சாமி, வழக்கறிஞர் டேவிட், போராளிகள் இயக்கம் சுந்தர், தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் ராஜா, பிரகாஷ், குளங்கள் காப்போம் கார்த்திகேயன், தீனா உட்பட பலர் மெழுகு வர்த்தி ஏந்தி, மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.