உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோய் விழிப்புணர்வு

ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோய் விழிப்புணர்வு

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி செம்படப்பேட்டை அங்கன்வாடி மையத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு, சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி அய்யம்மாள் தலைமை தாங்கி, காசநோயின் அறிகுறிகள், அதன் பாதிப்புகள், அவற்றை குணப்படுத்தும் முறைகள் குறித்து விளக்கினார். பல் மருத்துவர் ஹெலன் புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள் அவற்றை நிறுத்தும் வழிமுறைகள் குறித்து பேசினார். நிகழ்ச்சியில் காசநோய் ஆலோசகர்கள் மணிமாறன், பூங்குழலி, உதவியாளர் சங்கர்தேவி, ஆஷா ஊழியர்கள் பாரதி, தமிழரசி, சத்தியா உட்பட பலர் பங்கேற்றனர். செம்படப்பேட்டை, நெட்டப்பாக்கம் பகுதி மக்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை அங்கன்வாடி ஊழியர் அபிராமி செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி