உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கஞ்சா விற்ற இருவர் கைது

கஞ்சா விற்ற இருவர் கைது

நெட்டப்பாக்கம்: சூரமங்கலம் பகுதியில் சிறுவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.நெட்டப்பாக்கம் அடுத்த சூரமங்கலம் நான்கு முனை சந்திப்பு பகுதியில் நேற்று முன்தினம் இரவு வாலிபர்கள் மற்றும் , சிறுவர்களுக்கு சிலர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருப்பதாக நெட்டப்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு சென்று சந்தேகம்படும்படி நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாடு பகுதியைச் சேர்ந்த வினோத் 21, அரவிந்த் 19, என்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் 100 கிராம் கஞ்சா பொட்டலங்கள், ரூ.1400 மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் வைத்திருந்தனர். இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த கஞ்சா பொட்டலங்கள் மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ