மேலும் செய்திகள்
கத்தியை காட்டி மிரட்டிய 3 பேர் கைது
27-May-2025
அரியாங்குப்பம் : பெட்டிக்கடையில் 10 கிலோ குட்கா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனர்.அரியாங்கப்பம், மார்க்கெட் வீதியில் உள்ள பெட்டி கடைகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான குட்கா, பான்மசாலா விற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.அதையடுத்து, அரியாங்குப்பம் குற்றப்பிரிவு போலீசார் வேல்முருகன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் அந்த கடைகளில் சோதனை நடத்தினர். கடைகளில் குட்கா, பான்மசாலா ஆகிய பொருட்கள் இருந்ததை போலீசார் கண்டறிந்தனர். பெட்டி கடை உரிமையாளர்கள் அரியாங்குப்பம் செல்வம், 53; கோட்டக்குப்பம் முகமது அலி, 52, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 35 ஆயிரம் மதிப்புள்ள 10 கிலோ குட்கா, பான்மசாலா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
27-May-2025