கத்தியை காட்டி மிரட்டிய இருவர் கைது
புதுச்சேரி : பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டிய 2 பேரை, போலீசார் கைது செய்தனர்.45 அடி சாலை, அண்ணா சலை சந்திப்பு அருகே 2 நபர்கள், அவ்வழியாக சென்ற மக்களிடம் கத்தியை காட்டி மிரட்டி வருவதாக நேற்று முன்தினம் இரவு, பெரியக்கடை போலீசாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று, இரண்டு பேரையும், பிடித்து விசாரித்தனர். அதில், ஆம்பூர் சாலையை சேர்ந்த தர்மா, 34, குமரகுருபள்ளத்தை சேர்ந்த சங்கர், 39, என தெரியவந்தது.இருவரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து, கத்தியை பறிமுதல் செய்தனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.