உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இரு விபத்துகளில் இரண்டு பேர் பலி

இரு விபத்துகளில் இரண்டு பேர் பலி

புதுச்சேரி: இரு வேறு இடங்களில் நடந்த விபத்துக்களில் இரண்டு பேர் இறந்தனர். கருவடிக்குப்பம் மெயின் ரோட்டில் நேற்று (நவ.,4) அடையாளம் தெரியாத நபர் டி.வி.எஸ்., ஜூபிடர் ஸ்கூட்டரில் (பிஒய்.01.சியூ.3143) வந்து கொண்டிருந்தார். அப்போது குறுக்கே வந்த சைக்கிளில் இடித்து அவர் சறுக்கி விழுந்தார். தலையில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். விபத்து குறித்து வடக்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். மற்றொரு சம்பவம்: புதுச்சேரி, மோகன் நகரை சேர்ந்தவர் மணி,75. இவர் நேற்று முதலியார்பேட்டை நுாறடி சாலை ரயில்வே மேம்பாலத்தில் தனது மின்சார ஸ்கூட்டரில் தேங்காய்திட்டு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால், அடையாளம் தெரியாத வாகனம் மோதி கீழே விழுந்தார். அதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழிலேயே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் போக்குவரத்து கிழக்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை