உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மது போதையில் வாகனம் ஓட்டிய 2 பேருக்கு தலா ரூ.10,000 அபராதம்

மது போதையில் வாகனம் ஓட்டிய 2 பேருக்கு தலா ரூ.10,000 அபராதம்

பாகூர் : மது போதையில் பைக் ஓட்டிய இரண்டு பேருக்கு, தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து புதுச்சேரி கோர்ட் உத்தரவிட்டது.கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தன்வந்திரி உத்தரவின் பேரில், கடந்த சில நாட்களுக்கு முன், சோரியாங்குப்பம் பகுதியில் போக்குவரத்து போலீசார் வாகன தனிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த இரண்டு பேரை நிறுத்தி, பிரித் அனலைசர் கருவி மூலமாக சோதனை செய்யப்பட்டது. அதில், இரண்டு பேர், மது அருந்த விட்டு போதையில் வாகனம் ஓட்டி வந்தது தெரியவந்தது.இது தொடர்பாக, அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, அவர்களது பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, புதுச்சேரி ஜெ.எம் -3 நடமாடும் நீதிமன்ற நீதிபதி ராஜகுமரேசன், குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்த இரண்டு பேருக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். அவர்கள் அபராத தொகையை செலுத்தியதை தொடர்ந்து வாகனங்கள் விடுவிக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி