உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மூதாட்டி உட்பட இருவர் மாயம்

மூதாட்டி உட்பட இருவர் மாயம்

அரியாங்குப்பம்: வீட்டில் இருந்து காணாமல் போன மூதாட்டி உட்பட இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர். அரியாங்குப்பம் அடுத்த நோணாங்குப்பம் புதுநகரை சேர்ந்தவர் மீனாட்சி, 60. இவர் கடந்த 17ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார். வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்த புகாரின் பேரில், அரியாங்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். லாஸ்பேட்டை, ராமன் நகர், எம்.ஜி.ஆர்., நகர் பகுதியை சேர்ந்தவர் சங்கர்,53. இவரை கடந்த 9ம் தேதி முதல் காணவில்லை. புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !