உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இருவார கண்தான விழா தனியார் அமைப்புகளுக்கு விருது

இருவார கண்தான விழா தனியார் அமைப்புகளுக்கு விருது

அரியாங்குப்பம் : இருவார கண்தான விழாவையொட்டி, கண்தானம் வழங்கிய தனியார் அமைப்புகளுக்கு விருது வழங்கப்பட்டது. தவளக்குப்பம் அரவிந்த் கண் மருத்துவமனையில், இருவார கண்தான விழாவையொட்டி, விருது வழங்கும் விழா நடந்தது. புதுச்சேரி அரசு மருத்துவக்கல்லுாரி கண் வங்கி மேலாளர் எழில்வதனி, அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர் வெங்கடேஷ், டாக்டர் ஜோஸ்பின் கிறிஸ்டி முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக, டி.ஜி.பி., சத்தியசுந்தரம் பங்கேற்று பேசினார். அதனை தொடர்ந்து, கண்தானம் வழங்கிய பன்னாட்டு மனித உரிமை பேரவையின் தலைவர் சக்திவேல் உள்ளிட்ட தனியார் அமைப்புகளை சேர்ந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், கண் மருத்துவர்கள், ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை