புதுச்சேரியில் முதன்மை திட்டங்கள் குறித்து மத்திய உள்துறை செயலர் இன்று ஆய்வு புதுச்சேரியில் முதன்மை திட்டங்கள் குறித்து மத்திய உள்துறை செயலர் இன்று ஆய்வு
புதுச்சேரி, : மத்திய அரசின் உதவியுடன் புதுச்சேரியில் செயல்படுத்தப்படும் முதன்மை திட்டங்களின் நிலைமை பற்றி உள்துறை செயலர் இன்று ஆய்வு செய்கிறார்.இந்தியாவில் கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்புகளை கட்டியெழுப்பவும், அடிப்படை சேவைகளை விரைந்து வழங்கவும் பிளாக் ஷிப் புரோகிராம் என்ற பெயரில் முதன்மை திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து, சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து மத்திய அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது. அதன் பலன்கள் ஏழை, நலிந்த பிரிவினருக்கு சென்றடைந்துள்ளதா என்பதை அதிகாரிகளை அனுப்பி நேரில் ஆய்வு செய்கிறது.அதன்படி, புதுச்சேரியில் மத்திய அரசின் நிதி யுதவியுடன் செயல்படுத்தப்படும் முதன்மை திட்டங்கள் பற்றி மத்திய உள்துறை செயலர் கோவிந்த் மோகன் இன்று (23ம் தேதி) காலை 9:00 மணிக்கு தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளார்.இந்த கூட்டத்தில் தலைமை செயலர்,டி.ஜி.பி., அரசு செயலர்கள் கலந்து கொள்கின்றனர்.தொடர்ந்து 11:35 மணியளவில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து முதன்மை திட்டங்களில் புதுச்சேரியில் நிலைமை குறித்தும், உள்துறையில் நீண்ட காலமாக கிடப்பில் உள்ள திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடுகின்றனர். 11:45 மணியளவில் கவர்னரை சந்தித்து கலந்துரையாடும் அவர், மதியம் 1:00 மணியளவில் புறப்படுகிறார்.மத்திய உள்துறைச் செயலர் வருகையொட்டி அரசு செயலர் கேசவன், சீனியர் எஸ்.பி., சுவாதி சிங் மற்றும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.
உள்துறை செயலாளர் வருகை
இந்நிலையில் புதுச்சேரிக்கு நேற்றிரவு மத்திய அரசின் உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் மற்றும் கூடுதல் உள்துறை செயலர் அசுடோஸ் அக்னிஹோத்ரி ஆகியோர் வருகை தந்தனர். அவர்களை சபாநாயகர் செல்வம் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து, சபாநாயகருடன் மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் கலந்துரையாடினார்.
உள்துறை செயலாளர் வருகை
இந்நிலையில் புதுச்சேரிக்கு நேற்றிரவு மத்திய அரசின் உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் மற்றும் கூடுதல் உள்துறை செயலர் அசுடோஸ் அக்னிஹோத்ரி ஆகியோர் வருகை தந்தனர். அவர்களை சபாநாயகர் செல்வம் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து, சபாநாயகருடன் மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் கலந்துரையாடினார்.