உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / யோகா திருவிழாவில் குளறுபடி விசாரிக்க வலியுறுத்தல்

யோகா திருவிழாவில் குளறுபடி விசாரிக்க வலியுறுத்தல்

புதுச்சேரி; புதுச்சேரியில் சர்வதேச யோகா திருவிழாவில் நடந்த குளறுபடிகள் குறித்து அரசு விரிவான விசாரணை நடத்த வேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவர் சிவா வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை:புதுச்சேரியில் இந்தாண்டு நடந்த சர்வதேச யோகா திருவிழாவில் சுற்றுலாத்துறை விதிகளை தன்னிச்சையாக மாற்றி உள்ளது. வெளி மாநில போட்டியாளர்களுக்கு உணவு வழங்குவதில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.கட்டணம்மற்றும் போட்டிகளை நடத்த ஒதுக்கப்படும் நிதி குறித்த வரவு செலவில் முறைகேடுகள் நடந்துள்ளன.ஆரம்ப சுகாதார நிலையங்களில் யோகா பயிற்சி அளிப்பதில்லை. அனுபவம் இல்லாத உடற்கல்வி ஆசிரியர்கள் மூலம் ஓரிரு பள்ளிகளில் மட்டுமே யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனால் தகுதி, திறமை இருந்தும் பல மாணவர்களால் தேசிய அளவிலான யோகா போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை.ஸ்கூல் கேம் பெடரேஷன் ஆப் இந்தியா நடத்தும் யோகாசனப் போட்டிகளில் தேசிய அளவில் புதுச்சேரி மாணவர்கள் பங்கேற்க அனுபவம் வாய்ந்த யோகா நிபுணர்களை அரசு தேர்வு செய்ய வேண்டும்.போட்டிகளில் பங்கேற்க மாணவர்கள் வெளி மாநிலங்களுக்கு செல்ல அரசே நிதி ஒதுக்க வேண்டும். இந்தாண்டு சர்வதேச யோகா திருவிழாவில் நடந்த குளறுபடிகள் குறித்து அரசு விரிவான விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ