உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அமைச்சர் விழாவில் அமெரிக்க டாலர் மாயம் மணி எக்ஸ்சேஞ்ச் மையங்களில் கண்காணிப்பு

அமைச்சர் விழாவில் அமெரிக்க டாலர் மாயம் மணி எக்ஸ்சேஞ்ச் மையங்களில் கண்காணிப்பு

வில்லியனுார் : அமைச்சர் பிறந்த நாள் விழாவில், தொழிலதிபர் வைத்திருந்த அமெரிக்க டாலர்களை அபேஸ் செய்த ஆசாமியை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். அமைச்சர் நமச்சிவாயம் தனது பிறந்த நாளை நேற்று முன்தினம் அவரது வீட்டில் கொண்டாடினர். பல வி.வி.ஐ.பி.,க்கள் அணிவகுத்து சென்று வாழ்த்து தெரிவித்தனர். அவ்வாறு வாழ்த்து தெரிவிக்க அமைச்சர் ஜான்குமாருடன் சென்ற தொழிலதிபர் தினேஷ வைத்திருந்த, 12,255 அமெரிக்க டாலர்கள், கூட்ட நெரிசலில் மாயமானது. இதுகுறித்த புகாரை தொடர்ந்து, அமைச்சர் வீட்டில் இருந்த சி.சி.டி.வி., பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, அந்த கூட்டத்தில் சந்தேகிக்கும் வகையில் இருந்த மூவரை பிடித்து விசாரித்தனர். ஆனால், அவர்கள் அதில் சம்மந்தப்படவில்லை என்பது தெரிய வந்தது. அதனால், புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளில் அமெரிக்க டாலர்களை, இந்திய ரூபாயாக மாற்றித் தரும் 'மணி எக்ஸ்சேஞ்ச்' மையங்களுக்கு போலீசார் தகவல் கொடுத்துள்ளனர். மேலும், முக்கிய 'மணி எக்சேஞ்' மையங்களை போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். அதனால், அமெரிக்க டாலர்களை அபேஸ் செய்த மர்ம ஆசாமி ஓரிரு நாளில் சிக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை