உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வர்த்தக உரிமம் புதுப்பிக்க காலக்கெடு உழவர்கரை நகராட்சி அறிவிப்பு

வர்த்தக உரிமம் புதுப்பிக்க காலக்கெடு உழவர்கரை நகராட்சி அறிவிப்பு

புதுச்சேரி: உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வியாபரம் செய்பவர்கள் உடனடியாக வர்த்தக உரிமம் பெற வேண்டும் என ஆணையர் சுரேஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பு:உழவர்கரை நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வியாபாரம் செய்பவர்கள் அனைவரும் நகராட்சியின் வர்த்தக உரிமம் பெற்றிருத்தல் வேண்டும். ஆனால் கள ஆய்வில் பல வர்த்தக மற்றும் வியாபார நிறுவனங்கள் நகராட்சியின் வர்த்தக உரிமம் பெறாமல் அல்லது உரிமத்தை புதுப்பிக்காமல் இயங்கிவருகின்றன. இது புதுச்சேரி நகராட்சிகள் சட்டம், 1973 பிரிவு 355 மற்றும் 449-ன்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.எனவே, நகராட்சி உரிமம் பெறாமல் அல்லது உரிமத்தை புதுப்பிக்காமல் வர்த்தகம் செய்பவர்கள் வரும் 29ம் தேதி க்குள் உழவர்கரை நகராட்சி வருவாய் பிரிவை அணுகி அல்லது (www.lgrams.py.gov.in) இணையதளம் வாயிலாக உரிய விண்ணப்பம் செய்து தங்கள் நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு வர்த்தக உரிமம் பெறவேண்டும்.தவறும் பட்சத்தில் புதுச்சேரி நகராட்சிகள் சட்டம், 1973 பிரிவு 474(1)(b)-ன் கீழ் வர்த்தக உரிமம் இல்லாமல் இயங்கிவரும் வியாபார நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும். மேலும் 29ம் தேதிக்குள் வர்த்தக உரிமத்தை புதுப்பிக்க தவறினால் கூடுதலாக 25 சதவீதம் அபராதமாக செலுத்த நேரிடும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ