உழவர்கரை பா.ஜ.,வினர் பொங்கல் கொண்டாட்டம்
புதுச்சேரி: உழவர்கரை தொகுதி பா.ஜ., சார்பில், துாய்மை பணியாளர்களுடன் சமத்துவ பொங்கல் விழா கொண்டாப்பட்டது.உழவர்கரை தொகுதிக்குட்பட்ட பிச்சைவீரன்பேட் பகுதியில் பா.ஜ., மாநில செயலாளர், சரவணன் தலைமையில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.விழாவில், அமைச்சர் நமச்சிவாயம் துாய்மை பணியாளர்களுடன் இனணந்து பொங்கல் வைத்து கொண்டாடினார்.தொடர்ந்து துாய்மை பணியாளர்களுக்கு பா.ஜ., மாநில செயலாளர் சரவணன் ஏற்பாடு செய்திருந்த கரும்பு, புடவைகளை வழங்கினார். நிகழ்ச்சியில், உழவர்கரை தொகுதி அனைத்து பா.ஜ., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.