மேலும் செய்திகள்
பா.ம.க., கொடி பயன்படுத்தினால் நடவடிக்கை
3 minutes ago
லாஸ்பேட்டை கல்வி சதுக்கத்திற்கு வெளிச்சம்
8 minutes ago
போட்டோ எடுங்க... பரிசு பெறுங்க...
25-Nov-2025
கோரிமேடு பகுதியில் குடிநீர் இன்று கட்
25-Nov-2025
புதுச்சேரி: லாஸ்பேட்டை ெஹலிபேட் மைதானத்தில் பொதுமக்களுக்கு இடையூராக கால்நடைகளை திரியவிட்டால் பறிமுதல் செய்யப்படும் என உழவர்கரை நகராட்சி எச்சரித்துள்ளது. லாஸ்பேட்டை ஹெலிபேட் மைதானத்தில் கும்பலாக சுற்றி திரியும் கால்நடைகளால் மாணவர்கள், பொதுமக்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகின்றது. கால்நடைகள் வாங்கிங் செல்லுவோரை தாக்க பாய்கின்றன. இந்த அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகமாக வருகின்றது. கும்பல் கும்பலாக சுற்றி திரியும் கால்நடைகள் கண்டு பொதுமக்கள் சிதறி ஓடுகின்றனர். இது குறித்து தினமலரில் செய்தி வெளியான நிலையில் உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் உத்தரவின்பேரில், லாஸ்பேட்டை ெஹலிபேட் மைதானம், மற்றும் சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. உழவர்கரை நகராட்சி அதிகாரிகள் கூறும்போது, மாடுகள் வளர்ப்போர் தங்களது மாடுகளை சாலைகள் மற்றும் பொது இடங்களில் திரிய விட கூடாது. சுகாதாரமான முறையில் தங்களுக்கு சொந்தமான இடத்தில் மட்டுமே வளர்க்க வேண்டும்.லாஸ்பேட்டை ெஹலிபேட் மைதானத்தில் பொதுமக்களுக்கு இடையூராக கால்நடைகளை திரிய விட கூடாது. தவறினால் மாடுகள் பிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும். முதல் முறையாக மாடுகள் சிக்கினால் 3 ஆயிரம் ரூபாயும், இரண்டாவது முறையாக சிக்கினால் இரட்டிப்பு அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து கால்நடைகளை வீதியில் திரியவிட்டால் மாடுகளின் உரிமையாளர்கள் மீது போலீசில் புகார் அளித்து குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
3 minutes ago
8 minutes ago
25-Nov-2025
25-Nov-2025