உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மருத்துவமனைக்கு வாகனம் வைத்திலிங்கம் வழங்கினார்

மருத்துவமனைக்கு வாகனம் வைத்திலிங்கம் வழங்கினார்

புதுச்சேரி : எம்.பி., நிதியில் இருந்து வாங்கப்பட்ட பல்நோக்கு வாகனத்தை, அரசு பொது மருத்துவமனைக்கு வைத்திலிங்கம் எம்.பி., நேற்று வழங்கினார். இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனைக்கு, மருத்துவ உபகரணங்களை ஏற்றி செல்ல பல்நோக்கு வாகனம் வாங்குவதற்காக, எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.9 லட்சத்தை வைத்திலிங்கம் எம்.பி., ஒதுக்கி தந்தார்.இதில் வாங்கப்பட்ட பல்நோக்கு வாகனத்தின் சாவியை, அரசு மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் செவ்வேலிடம் நேற்று வைத்திலிங்கம் எம்.பி., வழங்கினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட அதிகாரி ராதாகிருஷ்ணன் உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை