உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வாரணாசி புனித மண் கலசம் வழங்கும் நிகழ்ச்சி

வாரணாசி புனித மண் கலசம் வழங்கும் நிகழ்ச்சி

புதுச்சேரி: புதுச்சேரி பா.ஜ., சார்பில், கவிஞர் குரு ரவிதாஸ், 650 வது ஜெயந்தியை முன்னிட்டு வாரணாசி புனித மண் கலசம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.  முன்னாள் சபாநாயகர் செல்வம் தலைமை தாங்கினார். இதில், குரு ரவிதாஸ் பிறந்த இடமான வாரணாசியிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித மண் அடங்கிய கலசம், குரு பூர்ணிமா நாளான நேற்று மணவெளி தொகுதி பூரணாங்குப்பம், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.  தொடர்ந்து, அந்த புனித மண் கலசங்கள் அரியாங்குப்பம் மாவட்டத்திற்கு உட்பட 5 தொகுதி தலைவர்களிடம் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், பா.ஜ., நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் உட்பட  பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ