உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வீரன் கோவில் கும்பாபிேஷகம்

வீரன் கோவில் கும்பாபிேஷகம்

நெட்டப்பாக்கம்: கரையாம்புத்துார் செல்வகணபதி, பொம்மியம்மாள், வெள்ளையாம்மாள் உடனுறை வீரன் கோவில் கும்பாபிேஷகம் நேற்று நடந்தது. விழாவையொட்டி, நேற்று முன்தினம் காலை கோ பூஜை, கிராம தேவதைகள் வழிபாடு, மாலை புற்று மண் வழிபாடு, வீரன் சுவாமிக்கு முதல்கால வேள்வி, திருமுறை விண்ணப்பம், பேரொளி வழிபாடும், இரவு 10:00 மணிக்கு செல்வகணபதி, பொம்மியம்மாள், வெள்ளையாம்மாள், வீரனார் திருமேனிகளுக்கு அஷ்டபந்தனம் சாத்துதல், விமான கலசம் நிறுவுதல் நடந்தது. நேற்று காலை 7:30 மணிக்கு இரண்டாம் கால வேள்வி பூஜை, 9:15 மணிக்கு திருக்குடங்கள் புறப்பாடு, 9:30 மணிக்கு விமான கோபுர கலசங்களுக்கு மகா கும்பாபிேஷகம், 9:45 மணிக்கு கருவறை தெய்வங்களுக்கு நன்னீராட்டு விழா, 10:30 மணிக்கு மகா கும்பாபி ேஷகம் நடந்தது. விழாவில துணை சபாநாயகர் ராஜவேலு மற்றும் பொதுமக்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கரையாம்புத்துார் கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை