உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வாகன பேன்சி எண்கள் ஏலம்

வாகன பேன்சி எண்கள் ஏலம்

புதுச்சேரி : போக்குவரத்துத் துறையின் வாகன பேன்சி எண்களுக்கான ஏலம் வரும் 18ம் தேதி நடக்கிறது.இதுகுறித்து, போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி போக்குவரத்து துறையின் (பி.ஓய். 05 யு) (உழவர்கரை) வரிசையில் உள்ள எண்களை https://parivahan.gov.in/fancy என்ற இணைய தளத்தில், வரும் 18ம் தேதி காலை 11:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை ஏலம் விட இருக்கிறது.ஏலத்தில் பங்கு பெறுவதற்கு தேவையான பெயர் மற்றும் கடவு சொல்லை https://parivahan.gov.in/fancy என்ற இணையதளத்தில் 'New public user' கிளிக் செய்து, இன்று (12ம் தேதி) முதல் 17ம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம்.பதிவு செய்தவர்கள் மட்டுமே, 18ம் தேதி காலை 11:00 மணி முதல் 4:30 மணி வரை நடக்கும் ஏலத்தில் பங்கு பெறலாம். ஏல வழிமுறைகள், நிபந்தனைகளை இன்று (12ம் தேதி) முதல் https://transport.py.gov.inஎன்ற இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.மேலும், விவரங்களுக்கு போக்குவரத்துத் துறை அலுவலக தொலைபேசி எண்ணை (0413 2280170) தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம். ஏல பண பரிவர்த்தனை அனைத்தும் 'ஆன்லைன் பேமண்ட்' வாயிலாக மட்டும் பெறப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை