மேலும் செய்திகள்
விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் பரிசு வழங்கல்
31-Oct-2026
கிராம கோவில் பூசாரிகள் ஆலோசனைக் கூட்டம்
08-Nov-2026
புதுச்சேரி: புதுச்சேரி விசுவ ஹிந்து பரிஷத் சார்பில், ஓம்காரனந்தா ஆசிரமத்தில் வேல் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. புதுச்சேரி விசுவ ஹிந்து பரிஷத் கந்த சஷ்டி வேல் பூஜையை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இன்று (நவ.,12) காலை புதுச்சேரி காமாட்சி அம்மன் வீதியில் உள்ள சுவாமி ஓம்காரனந்தா ஆசிரமத்தில் வேல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் வட தமிழக மாநில துணைத் தலைவர் திருஞான குருஜி கலந்து கொண்டு வேல் வழங்கினார். வட தமிழக மாநில அர்ச்சக மந்திர் இளங்கோ, இணை அமைப்பாளர் லட்சுமி நாராயணன், வடதமிழக மாநில சேவை அமைப்பாளர் ஜோதி செந்தில் கண்ணன், இணை அமைப்பளர் பஜ்ரங்கன், புதுச்சேரி நிர்வாகிகள் பாபு, பஜ்ரங்கள் சிவசுப்ரமணி, ஹரி கிருஷ்ணன், நாகராஜ், சிவனடியார் செண்பகவல்லி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை புதுச்சேரி தலைவர் ரவிக்குமார், செயலாளர் நந்தகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.
31-Oct-2026
08-Nov-2026