உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரி பட்டமளிப்பு விழா 

வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரி பட்டமளிப்பு விழா 

புதுச்சேரி: அரியூர், வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையின் 11வது பட்டமளிப்பு விழா கல்லுாரி சாய் அரங்கில் நடந்தது.விழாவை, வெங்கடேஸ்வரா கல்வி குழுமத்தின் தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். நிர்வாக இயக்குநர் மவுஷ்மி ராஜிவ்கிருஷ்ணா வரவேற்றார். இயக்குனர் ரத்தினசாமி ஆண்டு அறிக்கை வாசித்தார்.விழாவில், நிறுவனர் ராதா ராமச்சந்திரன், நிர்வாக இயக்குனர் ராஜிவ் கிருஷ்ணா, தலைமை இயக்க அதிகாரி வித்யா, பொது மேலாளர் சவுந்தரராஜன், டீன் பாப்பா தாசரி, மருத்துவ கண்காணிப்பாளர் ஜோசப்ராஜ் பங்கேற்றனர்.கவர்னர் கைலாஷ்நாதன், மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி, பேசுகையில், 'மருத்துவ உலகில் சிறந்த மருத்துவராக தேர்ச்சி பெற்று பட்டம் பெறும் நீங்கள், நோயாளிகள் மேல் நம்பிக்கை வைத்து சிறந்த சிகிச்சை அளிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் கொண்டு வரும் மருத்துவ வழிகாட்டுதல்களை, நோயாளிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும்.வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நவீன சிகிச்சைகளை மேற்கொண்டு நோய்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும்' என்றார்.பல்கலைக்கழக அளவில் தங்கப் பதக்கங்களை பெற்ற முது நிலை மருத்துவ மாணவர்கள் ரேவதி, விஜய், பிரித்விராஜ், விக்னேஷ், பாரதிவேலன், சினேகா சுனில் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.முதுநிலை மருத்துவ மாணவர்கள் 50 பேர், எம்.பி.பி.எஸ்., முடித்த 127 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. துணை மருத்துவ கண்காணிப்பாளர் சுரேஷ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை