மேலும் செய்திகள்
கால்நடை மருத்துவக்கல்லுாரி ஊழியர்கள் போராட்டம்
28-Jan-2025
புதுச்சேரி; ராஜிவ்காந்தி கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் போராட்டம் காரணமாக, 2வது நாளாக கால்நடைகளுக்கான சிகிச்சை பாதிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி, குருமாம்பேட்டில் ராஜிவ்காந்தி அரசு கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இயங்கி வருகிறது. புதுச்சேரியின்அனைத்து பகுதிகளையும் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாடு, ஆடு உள்ளிட்ட கால்நடைகள் தினமும் சிகிச்சை பெற்று வருகின்றன.இந்நிலையில், மருத்துவமனை மற்றும் கல்லுாரியில் பணியாற்றி வரும் மருத்துவர்கள், ஊழியர்கள் மூன்று மாத சம்பளம் வழங்கக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.இதற்கிடையே, நேற்று முன்தினம் திடீரென கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதை நிறுத்தி, பணிகளை புறக்கணித்து வேலை நிறுத்தப் போராட்டத்தை துவக்கினர். இதனால், மருத்துவமனைக்கு வெளியூர்களில் இருந்து சிகிச்சைக்காக கால்நடைகளை அழைத்து வந்தவர்கள் சிகிச்சை பெறாமல் திரும்பினர்.இந்நிலையில், நேற்றும் மருத்துவர்கள், ஊழியர்கள் போராட்டத்தை தொடர்ந்ததால், 2வது நாளாக கால்நடைகளுக்கான சிகிச்சைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன.
28-Jan-2025