மேலும் செய்திகள்
கால்நடை மருந்தகத்திற்கு சொந்த கட்டடம் தேவை
07-Jan-2025
அரியாங்குப்பம் : டி.என்., பாளையத்தில் நடந்த கால்நடை மருத்துவ முகாமை, சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார்.தவளக்குப்பம் அடுத்த டி.என்., பாளையத்தில், ரிலையன்ஸ் பவுண்டேஷன் மற்றும் புதுச்சேரி பிராணிகள் நலன் மற்றும் பாதுகாப்பு இயக்கம் சார்பில்,கால்நடை மருத்துவ முகாம் நடந்தது. முகாமைசபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார். ரிலையன்ஸ் பவுண்டேஷன் மேலாளர் ஜெய் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.கால்நடை இணை இயக்குனர் குமாரவேல், கால்நடைகளுக்கு மலட்டு தன்மை நீக்கம் செய்தார். கால்நடை மருத்துவர் செல்வமுத்து குடல் புழு நீக்க சிகிச்சை அளித்தார். அதனை தொடர்ந்து, 100க்கு மேற்பட்ட கால்நடைகளுக்கு, மலட்டு தன்மை குடற்புழு நீக்கும் சத்துமாவு கொடுக்கப்பட்டது.நிகழ்ச்சியில், ரிலையன்ஸ் பவுண்டேஷன் நிர்வாகிகள், கால்நடை மருத்துவ ஊழியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
07-Jan-2025