மேலும் செய்திகள்
அண்ணா பல்கலை வழக்கு தீர்ப்பு; தலைவர்கள் கருத்து
02-Jun-2025
காரைக்கால்: காரைக்கால் சிறையில் போதை பொருட்கள் புழங்குவதாக சமூக வலைதளத்தில் வைரலாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.காரைக்கால், மதகடி பகுதியில் கிளை சிறைச்சாலை இயங்கி வருகிறது. இங்கு, தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என மொத்தம் 40 பேர் உள்ளனர்.இந்நிலையில் சிறையில் தண்டனை முடித்து கடந்த 13ம் தேதி வெளியே வந்த, காரைக்கால்மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த தினேஷ், சிறையில் நடக்கும் பல்வேறு பிரச்னைகள் குறித்து வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது.அதில், இரட்டை கொலை வழக்கு தண்டனை கைதி ஒருவர், சிறைக்கு வரும் கைதிகளை மிரட்டி தாக்குவதாவும், தண்டனை கைதி ஒருவரின் உதவியுடன் சிறைகாவலர்கள், சிறைக்கு வரும் கைதியிடம் பணம் பறிக்கின்றனர். சரியான முறையில் உணவு வழங்குவதில்லை.கைதிகளை பார்க்க வரும் குடும்பத்தார் வாங்கி வரும் பழம்,பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களை சரியாக கைதிகளுக்கு வழங்குவதில்லை. மேலும் முக்கிய நபர்களுக்கு பிறந்தநாள் என்றால் பிரியாணி விருந்து மற்றும் சிறை கைதிகளுக்கு வெளியிலிருந்து போதை பொருட்கள் வழங்கப்படுகிறது. இதனை சிறை அதிகாரிகள் எவரும் கண்டு கொள்வதில்லை என குறிப்பிட்டுள்ளார்.இதுகுறித்து சிறை அதிகாரிகள் கூறியதாவது:சிறைக்கு வரும் புது கைதிகளை தண்டனை கைதிகள் மிரட்டுவது குறித்த புகார் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.கைதிகளுக்கு, உறவினர்கள் கொடுக்கும் பழம், பிஸ்கட் உள்ளிட்ட பொருட்கள் உரிய சோதனைக்கு பின் உரிய கைதிகளிடம் கொடுக்கப்படுகிறது. கைதிகள் அவர்களது உறவினர்களிடம் பேச, தொலைபேசி வசதி உள்ளது. சிறையில் எவ்வித பிரச்னையும் இல்லை என்றனர்.
02-Jun-2025