மேலும் செய்திகள்
ரத்தனா பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை
19-May-2025
புதுச்சேரி : சேதராப்பட்டு விக்னேஷ்வரா மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.பிளஸ் 2 தேர்வில், மாணவி ரேவதி 586 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றார். மாணவி ஸ்ரீநதி 573 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம், மாணவி உதயதாரணி 553 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவி தீபிகா 486 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றுள்ளார். மாணவி மரியரசி 484 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம், மாணவி பர்ஷாரெட்டி, மாணவர் தர்ஷன் 483 மதிப்பெண்கள் மூன்றாம் இடம் பிடித்தனர்.சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை பள்ளி சேர்மன் பார்த்தசாரதி, பள்ளி துணை முதல்வர் மோகன், தலைமை பொறுப்பாசிரியை மகேஷ்வரி ஆகியோர் சால்வை அணிவித்து பாராட்டினர்.
19-May-2025