/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பன்றிகளை திரியவிட்டால் நடவடிக்கை வில்லியனுார் கொம்யூன் எச்சரிக்கை
பன்றிகளை திரியவிட்டால் நடவடிக்கை வில்லியனுார் கொம்யூன் எச்சரிக்கை
புதுச்சேரி: வில்லியனுார் நகர பகுதியில் பன்றிகளை சாலையில் திரியவிட்டால் சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என. கொம்யூன் பஞ்சாயத்து எச்சரித்துள்ளது.இதுகுறித்து ஆணையர் ரமேஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து, வில்லியனுார் நகர பிரதான சாலைகள் மற்றும் அதனை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் பன்றிகளால் பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதுகுறித்து பல்வேறு புகார்கள் வந்துள்ளன.எனவே, பன்றி வளர்ப்போர் பன்றிகளை தங்கள் கண்காணிப்பில் பட்டியில் அடைத்து வளர்க்க வேண்டும். தவறினால் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.