உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வில்லியனுார் மாதா ஆலய ஆண்டு பெருவிழா தேர்பவனி

வில்லியனுார் மாதா ஆலய ஆண்டு பெருவிழா தேர்பவனி

வில்லியனுார் : வில்லியனுார் துாய லுார்து அன்னை ஆலய ஆண்டு பெருவிழா தேர் பவனி நேற்று நடந்தது.ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு, கடந்த 26ம் தேதி கொடியேற்றம் நடந்தது.தொடர்ந்து தினமும் காலை, மாலையில் சிறப்பு திருப்பலி, இரவு 7:00 மணிக்கு மேல் அலங்கரிக்கப்பட்ட தேர் பவனி நடந்து வருகிறது.முக்கிய விழாவான ஆண்டு பெருவிழா நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு காலை 7:30 மணிக்கு கும்பகோணம் மறை மாவட்ட முன்னாள் ஆயர் அந்தோணிசாமி தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி, மாலை 6:00 மணியளவில் புதுவை-கடலுார் உயர் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் சிறப்பு திருப்பலி, இரவு 7:30 மணிக்கு மேல் அலங்கரிக்கப்பட்ட தேரில் மாதா சொரூபத்தில் வைரகிரீடம் சூட்டப்பட்டு ஆடம்பர தேர் பவனி நடந்தது.தேர் திருவிழாவில் புதுச்சேரி, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இன்று (5ம் தேதி) காலை 6:30 மணி திருப்பலிக்கு பின், கொடியிறக்கம் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை அருட்தந்தையர்கள் ஆல்பர்ட், ஆல்வின் அன்பரசு, தோமினிக் சாவியோ, அலெக்சிஸ், பங்கு பேரவை துணைத் தலைவர் சூசைமியநாதன் டொமினிக், பொருளாளர் தர்மதுரை, செயலர் ஜெயராஜ், பெஞ்சமின் உட்பட பலர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை