மேலும் செய்திகள்
விருதுநகரில் ஆர்ப்பாட்டம்
21-Oct-2024
புதுச்சேரி : விஸ்வகர்மா சமூக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது.விஸ்வகர்மா சமூகத்தினர் குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனின் பேச்சை கண்டித்து, புதுச்சேரி விஸ்வ கர்ம சமூக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.பாரதி வீதி, காமாட்சியம்மன் கோவில் அருகில் இருந்து புறப்பட்ட பேரணி, நேரு வீதி, மிஷன் வீதி வழியாக வந்து மாதா கோவில் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டமைப்பு தலைவர் வெங்கடாஜலபதி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தார். நாகலிங்கம் உள்ளிட்டடோர் கலந்து கொண்டனர். பொருளாளர் தியாகராஜன் நன்றி கூறினார்.
21-Oct-2024