உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மோசடி வழக்கில் ஆஜராகாத பெண்ணிற்கு எச்சரிக்கை

மோசடி வழக்கில் ஆஜராகாத பெண்ணிற்கு எச்சரிக்கை

புதுச்சேரி : மோசடி வழக்கில் ஆஜராகாத பெண் நீதிமன்றத்தில் ஆஜராக ஒதியஞ்சாலை போலீசார் அறிவுறுத்தினர்.ஒதியஞ்சாலை போலீஸ் நிலை பொறுப்பு அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி, ரெட்டியார்பாளையம் கம்பன் நகர், 2வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ஹூகோ டெக்சின், 35; என்பவருக்கு எதிராக கடந்த 2017 ம் ஆண்டு புதுச்சேரி குற்றவியல் 2வது நீதித்துறை நடுவர் முன்பு மோசடி தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. வழக்கு விசாரணைக்கு ஹூகோ டெக்சின் ஆஜராகாததால் குற்றவியல் நீதிமன்றம் ஜாமினில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பித்தது.குற்றம் சுமத்தப்பட்ட ஹூகோ டெக்சின், வரும் டிசம்பர் மாதம் 9ம் தேதி குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பு ஆஜராகாத பட்சத்தில், அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக நீதிமன்றம் மூலம் அறிவிக்கப்படுவார் என்பதை தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி