மேலும் செய்திகள்
மதுக்கூடமாக மாறி வரும் செம்பரம்பாக்கம் ஏரிக்கரை
09-Sep-2024
புதுச்சேரியின் இரண்டாவது பெரிய ஏரி பாகூர் ஏரி. இந்த ஏரி சுற்று வட்டார கிராமங்களுக்குநிலத்திடிநீருக்கு முக்கிய ஆதாரமாக விளங்கி வருகிறது.இந்த ஏரியை முறையாக துார்வாரி பராமரிக்காததால், நீர் கொள்ளளவு குறைந்துள்ளது.இதனால், ஏரியை முழுமையாக துார்வாரி கரைகளை சீரமைத்து, கலிங்குகள் பகுதியில் பாலம் அமைத்து நீர்பிடிப்பு அளவைஅதிகரிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இந்நிலையில்,அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில், நுாறு நாள் வேலை திட்டத்தில் ஏரி கரையை மேம்படுத்தும் பணி சில நாட்களாக நடைபெற்று வருகிறது. ஏரியின் உட்புற கரைக்கு கீழே உள்ள பகுதியில், சுமார் அரை அடி ஆழத்திற்கு மண்ணைதோண்டி எடுத்து, அதனைஅப்படியே கரையின்மேல் பகுதியில் கொட்டி வருகின்றனர். இந்த பணியை பார்க்கும் விவசாயிகள், அரசு நிதி வீணடிக்கப்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர். ஏரியின் மையப்பகுதியில் ஆழப்படுத்தினால் மழை நீர் சேமிக்க முடியும். அதனை விடுத்து, கரைபகுதியிலேயே மண்ணை சுரண்டி, கரை மீது கொட்டுவதால் எந்த பயனும் இல்லை என்கின்றனர்.
09-Sep-2024