உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கனகன் ஏரியில் ஆகாய தாமரை அகற்றும் பணி

கனகன் ஏரியில் ஆகாய தாமரை அகற்றும் பணி

புதுச்சேரி : ரெட்டியார்பாளையத்தில் உள்ள கனகன் ஏரி அப்பகுதிக்கு முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. ஏரியில் தண்ணீர் தெரியாத அளவிற்கு அதிகளவில் ஆகாய தாமரை செடிகள் படர்ந்திருந்தது. அதையடுத்து, பருவமழை முன்னெச்சரிக்கையாக, செடியை அகற்ற முடிவு செய்யபட்டது. இந்நிலையில், ஆகாயத் தாமரை செடிகளை, அகற்றும் பணியில், பொதுப்பணித்துறை மூலம், செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் லூயிஸ் பிரகாசம், இளநிலை பொறியாளர் கணேஷ் ஆகியோர் மேற்பார்வையில், 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணி கடந்த 20 நாட்களாக நடந்து வருகிறது. 80 சதவீதம் பணிகள் முடிந்துள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை