உள்ளூர் செய்திகள்

கிணற்றை காணோம்

வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட குருவப்பநாயக்கன்பாளையம் (ஜி.என்.பாளையம்) கிராமத்தில், சிமெண்ட் சாலை, வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி நடக்கிறது. மாரியம்மன் கோவில் வீதி - காமன்கோவில் வீதி சந்திப்பில் இருந்த பாழடைந்த கிணறு மாயமாகி விட்டது. அதனை கண்டுபிடிக்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் இருந்த பாழடைந்த கிணற்றை மூடி தற்போது வீடு கட்டியுள்ளனர். சாலை நேராக அமைப்பதற்காக கிணறு இருந்த இடத்தில் 2 அடி நிலம் அகற்றப்பட்டது. இதற்கு கிணறு அருகே வீடு கட்டியவர் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் எதிர் தரப்பு கிணறு காணவில்லை என, திடீரென புகார் எழுப்பி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை