உள்ளூர் செய்திகள்

ஆயுத பூஜை விழா

வில்லியனுார்: திருபுவனை பிப்டிக் தொழிற்சாலை பகுதியில் உள்ள தொழிலாளர் நல சங்கங்களின் சமூக சேவகி அண்ணாபிரபாவதி தலைமையில் ஆயுத பூஜை விழா கொண்டாடினர். திருபுவனைதொகுதிக்குட்பட்ட பிப்டிக் தொழிற்சாலை பகுதியில் உள்ள சாய்பாபா சுமை ஏற்றுவோர் இறக்குவோர் நல சங்கம்,உழைக்கும் கரங்கள் நல சங்கம், என்.எஸ்.கே. கலைவாணர் சுமை ஏற்றுவோர் இறக்குவோர் நல சங்கத்தின் சார்பில், ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நடந்தது. ஆயுத பூஜை விழாவில் சமூக சேவகி அண்ணாபிரபாவதி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பூஜை செய்து பரிசு பொருட்களையும், நலசங்க வளர்ச்சிக்கு தலா ரூ. 5 ஆயிரம் நிதியுதவி வழங்கி வாழ்த்தினார். நிகழ்ச்சியில் தொழிலாளர் நலசங்க நிர்வாகிகள் கமலஹாசன், கார்த்திகேயன், பரசுராமன், ரமேஷ், எட்டியான், சிவமூர்த்தி, சுரேந்தர், பாலகுமார், சதீஷ், ஆகாஷ், ஹரிபிரசாத் உள்ளிட்ட திரளான தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி