மேலும் செய்திகள்
முடங்கிய வங்கிக் கணக்குகள் புத்துயிர் பெறுமா?
06-Dec-2024
புதுச்சேரி: பெஞ்சல் புயல் நிவாரண தொகை வங்கியில் வரவு வைக்கப்பட்ட தகவல் அறிய இணையதள முகவரி மற்றும் கியூ ஆர்கோடு வெளியிடப்பட்டுள்ளது. பெஞ்சல் புயல் மழையால் பாதிக்கப்பட்ட புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்பத்தினருக்கும் தலா ரூ. 5000 மழை நிவாரணம் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரி, காரைக்கால், ஏனாமில் உள்ள 3,54,726 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு தலா 5000 வீதம் நிவாரண தொகை, குடும்ப தலைவி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.சிலருக்கு நிவாரண தொகை வரவில்லை எனவும், குடும்பத்தில் யாருடைய வங்கி கணக்கில் நிவாரண தொகை செலுத்தப்பட்டது என தெரியாமல் குழம்பி வருகின்றனர். இதனால் குடும்பத்தில் யாருடைய வங்கி கணக்கில் நிவாரண தொகை செலுத்தப்பட்டுள்ளது என்ற விபரம் அறிய குடிமைப்பொருள் வழங்கல் துறை இணையதள முகவரி மற்றும் கியூ ஆர் கோடு வெளியிட்டுள்ளது.குடிமைப்பொருள் வழங்கல் துறை இயக்குநர் சக்திவேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:புதுச்சேரி அரசு அறிவித்த பெஞ்சல் புயல் நிவாரணம் ரூ. 5000, புதுச்சேரி காரைக்கால் மற்றும் ஏனாம் பிராந்தியத்தை சேர்ந்த அனைத்து ரேஷன் கார்டுகளின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் நேரடி பரிமாற்ற முறை மூலம் வரவு வைக்கப்பட்டுள்ளது. பயனாளிகள் இணையதள லிங்க் அல்லது கியூஆர் கோடு மூலம் வரவு வைக்கப்பட்டுள்ள விபரத்தினை அறிந்து கொள்ளலாம். https://pdsswo.py.gov.in/helpdesk/ என்ற பக்கத்திலும், கியூ ஆர்கோடு மூலம் அறிந்து கொள்ள முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
06-Dec-2024