மேலும் செய்திகள்
குமரேஸ்வரர் கோவிலில் சூரசம்ஹாரம் விழா
26-Oct-2025
புதுச்சேரி: நாவற்குளம் செல்வ முத்துக்குமாரசுவாமி கோவிலில் 5ம் ஆண்டு திருகல்யாண உற்சவம் இன்று நடக்கிறது. புதுச்சேரி அடுத்த நாவற்குளத்தில் உள்ள பாலவிநாயகர், பாலமுருகன், வள்ளி, தேவசேனா சமேத செல்வ முத்துக் குமாரசாமி கோவிலில் 5ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவம் இன்று (28ம் தேதி) நடக்கிறது. இதையொட்டி, இன்று காலை 8:30 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனையும், மாலை 6 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத செல்வமுத்துக் குமாரசாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
26-Oct-2025