திருக்கல்யாணம்
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் கிராமத்தில் பர்வதவர்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில் வைகாசி பிரமோற்சவ விழா கடந்த 17 ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. விழாவையொட்டி, வரும் 2ம் தேதி வரை தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடக்கிறது. நேற்றிரவு மயில் வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. பர்வதவர்தினி ராமலிங்கேஸ்வரர் திருக்கல்யாணம் வரும் 26ம் தேதியும், 28ம் தேதி காலை 7.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தலும் 2ம் தேதி விடையாற்றி உற்சவம் நடக்கிறது.