உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கல்லுாரிகளுக்கு இடையே பளு துாக்கும் போட்டி

கல்லுாரிகளுக்கு இடையே பளு துாக்கும் போட்டி

புதுச்சேரி: கல்லுாரிகளுக்கு இடையே, நடந்த பளு துாக்கும் போட்டியில், அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் இருந்து மாணவர்கள் பங்கேற்றனர். தவளக்குப்பம் ராஜிவ்காந்தி அரசு கல்லுாரி மற்றும் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை இணைந்து, உப்பளம் ராஜிவ்காந்தி உள் விளையாட்டு அரங்கத்தில் பளு துாக்கும் போட்டி நடந்தது. இதில், பெண்கள் மற்றும் ஆண்கள் பிரிவில், அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், ராஜிவ்காந்தி அரசு கல்லுாரி முதல்வர், ஹென்னா மோனிஷா தலைமை தாங்கினார். உடற்கல்வி இயக்குனர் ஆதவன் முன்னிலை வகித்தார். போட்டியில், ஆண்கள் பிரிவில், ஆச்சார்யா பொறியியல் கல்லுாரியும், பெண்கள் பிரிவில், பாரதிதாசன் அரசு பெண்கள் கல்லுாரியும், பதக்கங்களை வென்றது. வெற்றிபெற்ற மாணவர்களுக்கு, பேராசிரியர் செல்வராஜ், பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை