உழவர்கரை தொகுதியில் நலத்திட்ட உதவிகள்
புதுச்சேரி: உழவர்கரை வயல் வெளி நகர் புனித பெரிய நாயகி அன்னை சிற்றாலய அர்ச்சிப்பு திருப்பலி விழாவில் கலந்து கொண்ட மக்களுக்கு அரிசி, காய்கறிகள் தொகுப்புகளை என்.ஆர்.காங்., பிரமுகர் டாக்டர் நாராயணசாமி கேசவன் வழங்கினார்.உழவர்கரை தொகுதிக்குட்பட்ட வயல்வெளி நகரில் கிருத்துவ மக்களின் ஒருங்கிணைப்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்ட புனித பெரிய நாயகி அன்னை சிற்றாலய அர்ச்சிப்பு திருப்பலி பெருவிழா நடக்கிறது.விழாவில், சிறப்பு அழைப்பாளராக உழவர்கரை தொகுதி சமூக சேவகரும், என்.ஆர்.காங்., பிரமுகர் டாக்டர் நாராயணசாமி கேசவன் பங்கேற்று திருப்பலி பெருவிழாவில் கலந்து கொண்ட 500க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு அரிசி, மற்றும் காய்கறிகள் அடங்கிய சிறப்பு தாம்பூல தொகுப்புகளை தனது சொந்த செலவில் வழங்கினார். நிகழ்ச்சியில், ஆலய நிர்வாகிகள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள், ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர்.