எம்.எல்.ஏ.,விற்கு விடுதி வழங்காதது ஏன்
சட்டசபையில் நேருக்கு நேர் விவாதம்புதுச்சேரி: எம்.எல்.ஏ., இல்லாதவருக்கு விடுதி கொடுத்துள்ளதாக காங்., எம்.எல்.ஏ., புகாரால் சட்டசபையில் கடும் விவாதம் நடந்தது. பட்ஜெட் மீதான மானிய கோரிக்கைகள் விவாதத்தில், வைத்தியநாதன் எம்.எல்.ஏ., பேசுகையில், மாகியில் இருந்து வரும் எம்.எல்.ஏ.வுக்கு, புதுச்சேரியில் தங்குவதற்கு விடுதி வசதி செய்து கொடுக்கவில்லை. ஆனால், எம்.எல்.ஏ., இல்லாதவருக்கு விடுதி கொடுத்துள்ளனர் என குற்றம்சாட்டினார்.ஆறுமுகம், (என்.ஆர்.காங்.,); யாருக்கு கொடுத்துள்ளனர். சபையில் பொய் கூற கூடாது என கூறினார். வைத்தியநாதன் (காங்.,); உண்மையை வெளிப்படையாக கூறலாமா என கேட்டார். இதனால், அரசு கொறடா ஆறுமுகத்திற்கும், வைத்தியநாதன் எம்.எல்.ஏ.,வுக்கும் நேருக்கு நேர் வாக்குவாதம் நடந்தது. சபாநாயகர் செல்வம் குறுக்கிட்டு, காரைக்கால், மாகி, ஏனாம் எம்.எல்.ஏ.க்களுக்கு என்ன வசதி செய்து கொடுக்க வேண்டுமோ அதை செய்துள்ளோம். இருவரும் அமருங்கள் என கூறி அமர வைத்து விவாதத்தை முடித்து வைத்தார்.