உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கணவருடன் பிரச்னை மனைவி தற்கொலை

கணவருடன் பிரச்னை மனைவி தற்கொலை

வில்லியனுார், : வில்லியனுார் அருகே கணவருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்னையில் மனமுடைந்த மனைவி துாக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.வில்லியனுார் அடுத்த ஒதியம்பட்டு எஸ்.ஆர். நகரை சேர்ந்தவர் அன்பரசன். இவர் தனியார் துப்புரவு நிறுவனத்தில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சித்ரா, 35. இவர்களக்கு 13 மற்றும் 8 வயதில் இரு மகள்கள் உள்ளனர். குடும்ப பிரச்னையால் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சித்ரா நேற்று முன்தினம் மாலை வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ