உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மனைவி பிரிந்த சோகம் கணவர் தற்கொலை

மனைவி பிரிந்த சோகம் கணவர் தற்கொலை

புதுச்சேரி: வம்பாகீரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நாகவேல்,46. இவர் இருபது ஆண்டுகளாக சிங்கப்பூரில் வேலை செய்து வந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மகாலஷ்மி,37, என்பவருக்கும் எட்டு ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர். நாகவேல் இரண்டு மாதங்களுக்கு முன் சிங்கபூரில் இருந்து சொந்த ஊர் திரும்பினார். கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன் துபாயில் ஆசிரியை பணி கிடைத்து மகாலஷ்மி பிள்ளைகளுடன் அங்கு சென்றார். மனைவி பிள்ளைகளை பிரிந்து தனியாக இருந்த நாகவேல், மனவேதனையில் மது குடித்து வந்தார். நாகவேல் நேற்று முன்தினம் வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை