மனைவி இறந்த சோகம் கணவர் தற்கொலை
புதுச்சேரி: மனைவி இறந்த துக்கத்தில் கணவர் பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். புதுச்சேரி, சாரம், சக்தி நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார், 54; நெல்லித்தோப்பு மார்கெட்டில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பிரேமா, சில மாதங்களுக்கு முன் இறந்தார். இதனால் மன வருத்தத்தில் இருந்த சிவக்குமார் கடந்த 28ம் தேதி கரையான் மருந்து குடித்து வீட்டில் மயங்கி விழுந்தார். இவரை உறவினர்கள் மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சிவக்குமார் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். புகாரின் பேரில் உருளையான்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.