உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  மனைவி மாயம் கணவர் புகார்

 மனைவி மாயம் கணவர் புகார்

புதுச்சேரி: சொக்கநாதன்பேட்டை, ராமலிங்கம் நகரை சேர்ந்தவர் சரவணன் மனைவி நாகம்மாள், 42. இவர், தனது தாய் வீடான நாகர்கோவில் அடுத்த அமராவதி கிராமத்திற்கு, கடந்த 17ம் தேதி சென்றவர், திரும்ப புதுச்சேரிக்கு வரவில்லை. அவரது கணவர் மாமியார் வீட்டில் மொபைல் மூலம் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் அங்கு செல்லவில்லை என்பது தெரியவந்தது. பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து, அவரது கணவர் கொடுத்து புகாரின் பேரில், டி. நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ