மனைவி மாயம்: கணவர் புகார்
காரைக்கால்: காரைக்கால், புதுத்துறை, சமீர் நகரைச் சேர்ந்தவர் பஷீர் அஹமது; ஆட்டோ டிரைவர். இவரது மனைவி ஜூலைகா ஆரிபா, 28. இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். பஷீர் அஹமதுவின் தம்பி மனைவி சுமித்ரா பிரசவத்திற்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரைப் பார்ப்பதற்காக ஜூலைகா ஆரிபா கடந்த 3ம் தேதி தனது பைக்கில் மருத்துவமனைக்கு சென்றார். அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து பஷீர் அஹமது புகாரின் பேரில், நகர காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.