உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பேனர் வைத்தவர் கைது போலீஸ் அதிரடி முதலியார்பேட்டை போலீசாரை மற்றவர்களும் பின்பற்றுவார்களா?

பேனர் வைத்தவர் கைது போலீஸ் அதிரடி முதலியார்பேட்டை போலீசாரை மற்றவர்களும் பின்பற்றுவார்களா?

புதுச்சேரியில் பேனர் தடை சட்டம் அமலில் இருந்தாலும், அச்சட்டத்தை யாரும் மதிப்பது கிடையாது. சட்டத்தை அமல்படுத்த வேண்டிய போலீசாரும் நடவடிக்கை எடுப்பது இல்லை. பொதுப்பணி, உள்ளாட்சி ஆகிய துறைகளின் அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை.புதுச்சேரி சட்டசபை அருகிலேயே, விக்டர் சிமோனல் வீதி - செயின்ட் தாழ் வீதி சந்திப்பில் பேனர் வைப்பதற்கு என தனி இடம் ஒதுக்கி வைத்து ஆண்டின் 365 நாட்களும் பேனர் வைக்கும் அளவுக்கு நிலைமை சீர்கெட்டுள்ளது.மெட்ராஸ் திரைப்படத்தில் சுவரை பிடிக்க போட்டி நடப்பதுபோல், சட்டசபை எதிரில் பேனர் வைப்பதிலும் போட்டி நடந்து வருகிறது. இதுபோல், புதுச்சேரி முழுதும் சில இடங்களை அடையாளப்படுத்தி, அங்கு தொடர்ச்சியாக பேனர்கள் கட்டி புதுச்சேரியின் அழகை சீர்குலைத்து வருகின்றனர்.பேனருக்காக கட்டப்படும் மரக்கம்புகள் மீது வாகனங்கள் மோதி விபத்தில் சிக்கி வருகின்றனர். பலர் காயமடைவதும் தொடர்கதையாக உள்ளது. ஓரிரு உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. பேனர் சரிந்து விழுந்து காயம் அடையும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.இந்நிலையில், முதலியார்பேட்டை ஏ.எப்.டி., மில் சாலை சந்திப்பு அருகே நேற்று முன்தினம் வைக்கப்பட்டு இருந்த திருமண வாழ்த்து பேனர், சாலையில் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது முறிந்து விழுந்தது. இதில், இருவர் காயமடைந்தனர்.முதலியார்பேட்டை போலீசார், பேனர் வைத்த அனிதா நகர், 4வது குறுக்கு தெருவைச் சேர்ந்த அப்பு (எ) பிரித்விமேனன், 24, என்பவர் மீது புதுச்சேரி திறந்தவெளி அழகு சீர்குலைப்பு தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின், போலீஸ் நிலைய ஜாமீனில் விடுவித்தனர்.முதலியார்பேட்டை போலீசாரை பின்பற்றி, புதுச்சேரியில் உள்ள மற்ற போலீசாரும் பேனர் வைப்பவர்கள் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுத்தால், புதுச்சேரி 'கிளீன்' புதுச்சேரியாக மாறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ