மேலும் செய்திகள்
பெண்ணிடம் ரூ.3 லட்சம் மோசடி
03-May-2025
புதுச்சேரி : டில்லி போலீஸ் அதிகாரி எனக் கூறி பெண்ணிடம் ரூ.1.53 லட்சம் மோசடி செய்த நபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். கருவடிக்குப்பத்தை சேர்ந்த பெண் ஒருவரை தொடர்பு கொண்ட மர்ம நபர், டில்லி போலீஸ் அதிகாரி பேசுவதாகவும், உங்கள் பெயரில் பண மோசடி நடந்துள்ளது தொடர்பாக சைபர் கிரைமில் வழக்குப் பதிவு செய்துள்ளது. வழக்கில் இருந்து விடுவிக்க பணம் அனுப்ப கூறியுள்ளார். அதனை நம்பி அந்த பெண் ரூ.1.53 லட்சத்தை அனுப்பி ஏமாந்துள்ளார். பாகூரை சேர்ந்த ஆண் நபரை தொடர்பு கொண்ட மர்ம நபர், வங்கி அதிகாரி பேசுவதாகவும், முத்ரா கடனுதவி திட்டத்தில் குறைந்த வட்டியில் ரூ. 2 லட்சம் வரை கடன் தருவதாகவும், அதற்கு செயலாக்க கட்டணம் செலுத்த கூறினார். அதனை நம்பி மர்ம நபர் கூறிய வங்கி கணக்கி்ல ரூ.48 ஆயிரத்து 500 அனுப்பி ஏமாந்துள்ளார். வீராம்பட்டினத்தை சேர்ந் பெண் ஒருவர், ஓட்டலில் அறைக்கு முன்பதிவு செய்ய ஆன்லைனில் கிடைத்த மொபைல் எண்ணில் பேசினார். எதிர்முனையில் பேசிய மர்மநபர், அறை முன்பதிவு செய்ய பணம் செலுத்த கூறினார். இதையடுத்து, அப்பெண் 20 ஆயிரத்து 400 ரூபாய் செலுத்தி ஏமாந்துள்ளது. இதேபோல், புதுச்சேரி பெண் ஒருவர் 20 ஆயிரம், ஆண் நபர் 60 ஆயிரத்து 317, மற்றொறரு பெண் 33 ஆயிரம் என 6 பேர் 3 லட்சத்து 35 ஆயிரத்து 317 ரூபாய் இழந்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
03-May-2025