உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கடன் பிரச்னையால் பெண் தற்கொலை 

கடன் பிரச்னையால் பெண் தற்கொலை 

புதுச்சேரி : வில்லியனுார், மல்லிகா தியேட்டர் வீதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு, 47; கூலி தொழிலாளி. இவர், கடந்த 7 ஆண்டுகளாக தனது மனைவி வள்ளியுடன், கொசப்பாளையம், செல்லப் பெருமாள் கோவில் வீதியில் வாடகை வீட்டில் வசித்தார்.மாற்று திறனாளியான இவரது மனைவி வள்ளி, 43; நாவற்குளம் பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை செய்து வந்தார். வள்ளி மகளிர் சுய உதவி குழு மற்றும் பல்வேறு இடங்களில் கடன் வாங்கி செலுத்த முடியாமல் மனவேதனையில் இருந்தார்.வில்லியனுாரில் திருநாவுக்கரசின் அண்ணி இறந்ததால், கணவன் - மனைவி இருவரும் அங்கு சென்று தங்கினர். கடந்த 7ம் தேதி வில்லியனுாரில் இருந்து கொசப்பாளையம் வீட்டிற்கு வந்த வள்ளி, மீண்டும் வில்லியனுார் வரவில்லை.நேற்று மதியம் திருநாவுக்கரசு, தனது தம்பி ரமேைஷ கொசப்பாளையம் வீட்டிற்கு அனுப்பி மனைவி வள்ளி உள்ளரா என பார்த்துவிட்டு வருமாறு கூறினார். ரமேஷ் சென்று பார்த்தபோது, வள்ளி வீட்டின் அறையில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.தகவலறிந்த உருளையன்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, வள்ளியின் உடலை மீட்டு, கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை