உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வேன் மோதி பெண் பலி: போலீசார் விசாரணை

வேன் மோதி பெண் பலி: போலீசார் விசாரணை

பாகூர்: டெம்போ டிராவலர் வேன் மோதி ஸ்கூட்டரில் சென்ற பெண் இறந்தார். வில்லியனுார் அடுத்த கொம்பாக்கத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி மனைவி அமுதா, 51; அரியாங்குப்பத்தில் உள்ள தனியார் டைல்ஸ் ேஷாரூமில், வேலை செய்து வந்தார். இவர், நேற்று இரவு பணி முடித்து விட்டு, அங்குள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில், தனது ஆக்டிவா ஸ்கூட்டரில் பெட்ரோல் நிரப்பி கொண்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அரியாங்குப்பம் - மணவெளி ரோடு சந்திப்பில், புதுச்சேரியில் இருந்து காரைக்கால் நோக்கி சென்ற டெம்போ டிராவலர் வேன் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து தறி கெட்டு ஓடி, ஸ்கூட்டர் மீது மோதியது. படுகாயமடைந்த அமுதாவை, கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீசார் மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு, டாக்டர் பரிசோதித்து, அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். விபத்து ஏற்படுத்திய வேன் டிரைவர் கணுவாப்பேட்டையை சேர்ந்த சண்முகபிரியன் ராவ் என்பவர் மீது, கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில், காரைக்காலை சேர்ந்த பெண் ஒருவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது குடும்பத்தினர் அவரை, வேனில் அழைத்து கொண்டு காரைக்கால் நோக்கி சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த விபத்து ஏற்படுத்தியது தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ